காஞ்சிபுரம், ஆக. 30 –

பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது. எனவே தமிழக அரசு மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்திட வேண்டும் எனவும்,  அதனால் மக்கள் துயரம் குறையும் என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜ காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோமொபைல் ஓ, இ, எம் தொழிலாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் அகில இந்திய மாநாட்டிற்க்கு அகில இந்திய துணைத் தலைவர் (சிஐடியு மாநில தலைவர்) அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கி வைத்துப் பேசினார். கர்நாடகா மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், அகில இந்திய துணைத் தலைவர்கள் உமேஷ், சாய்பாபு, சந்திப் குப்தா, தமிழ் மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், ஆர்.சிங்காரவேலு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹூண்டாய், யமஹா, நிசான், பிஎம்டபிள்யூ, அசோக் லேலண்ட், மகேந்திரா அண்ட் மகேந்திரா, வால்வோ, வால்வோ பஸ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் மாநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம்  நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைளை நிர்வாகம் மூடுவதற்கு என்ன காரணம் என  அரசு தெரிந்து கொள்வதில்லை, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது ஆனால் நோக்கிய செல்போன் யாரும் பயன்படுத்தாமல் இல்லை மீண்டும் நோக்கியா, ஃபாஸ்கான் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இதை அரசு அனுமதிக்ககூடாது, தொழிற்சாலை மூடுவதை அரசிடம் அனுமதி பெற வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மூடுவது அதிகரித்து வருகின்றது. மேலும் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது, அவ்வாய்ப்புகளை உருவாக்குவதை பார்க்க முடிகின்றது. மேலும், தொழிற்சாலைகளை மூடுவதும் அதனால் ஏற்படும் வேலையிழப்பும் தொடர் கதையாகவுள்ளது இதில் தமிழக அரசு தலையிட வேண்டும் என பேசினார்

மேலும் சென்னை அருகே காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, குடியிருப்புகள், விளை நிலங்கள், நீர்நிலைகள், காலம் காலமாக குடியிருக்கும் மக்கள் பாதிக்காமல் விமான நிலையம் அமைக்க வேண்டும், ஒரு வேலை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இப்போது இருப்பது போலவே வீடு, விவசாய நிலங்கள், உருவாக்கி தர வேண்டும் இல்லை என்றால் மக்களின் துயரங்களை தாங்கி கொள்ள முடியாது, விமான நிலையம் வேண்டும் என ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே காலம் காலமாக வாழகூடிய வாழ்க்கையையும் பாதுகாக்கப்பட வேண்டும், விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது மக்கள் குடியிருப்புகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்தால் மக்கள் துயரம் குறையும் என பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here