கும்பகோணம், ஆக. 26 –

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நாட்டார் மற்றும் அரசலாற்றுக்கு  இடையே முனியாண்டவர் கோயில் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. மேலும் இக்கோவில் மற்றும் ஈமக்கிரியை மண்டபத்தினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழவத்தான்கட்டளை, சாக்கோட்டை, முத்துப்பிள்ளை மண்டபம், முல்லை நகர், நீடாமங்கலம் சாலை, கஸ்தூர்பாக் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் பொதுப்பணித்துறையினர் தற்போது கட்டிடம் கட்டி வருகின்றனர்.

இந்த கட்டிடம் கட்டப்பட்டால் நூறாண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை அடைப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 5 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உயர்மட்ட அலுவலர்களிடம் இதுக் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  கூடினர். இப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாக்கோட்டை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் நீடித்தது. காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

பேட்டி :

தியாகராஜன் போராட்டக் குழு. சாக்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here