திருவாரூர். ஆக. 20 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில் ஒட்டிச்சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு இதில் கலைமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக கலைமணி உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பின் அமர்ந்து வந்த அவரது நண்பர் அலெக்சாண்டருக்கும் படுகாயம் ஏற்பட்டு அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ் விபத்துக் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















