மீஞ்சூர், ஆக. 15 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வல்லூர் ஊராட்சியில் மன்றத் தலைவர் உஷா ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்களாக குடிதண்ணீர், தொகுப்பு வீடுகள், நூலகம் பராமரிப்பு பணி, கொசு ஒழிப்பு, சுகாதார மேம்பாடு குறித்த பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து கூட்டம் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து அத்திப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமையிலும். துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்தும், மேலும், புதிய சாலை அமைத்தல் மற்றும் செப்பணிடுதல், கழிப்பிட வசதி. டெங்கு கொசு ஒழிப்பு. உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது.
மேலூர் ஊராட்சியில் வாசுகி நிலவழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தென்னை மர கன்றுகள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி செயலர்கள் இளஞ்சூரியன். நாகம்மாள். பொற்கொடி.உள்ளிட்டவர்களும் மற்றும் திரளான பொதுமக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.