திருவண்ணாமலை ஆக.12-

வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

சம்பளம் வழங்கும் அலுவலர் என்ற முறையில் கருவூலத்தின் பணிகள், பணம் பெற்று வழங்கும் அலுவலர் என்ற முறையில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் மாதசம்பளத்தில் வருமான வரி கணக்கிட்டு, மாதசம்பளத்தில் பிடித்தம் செய்வது. பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கில் சேர்ப்பது, தனிப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருமான வரி படிவத்தை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வது உள்ளிட்ட கடமைகள், பொறுப்புகள்  குறித்தும் அவ்வாறு வருமானவரி படிவம் தாக்கல் செய்யாதபோது எதிர்கொள்ளவெண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகவாகவும், துறை அலுவலர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலர் முத்து சிலுப்பன் அவர்கள் பயிற்சி கூட்டத்தை தலைமை தாங்கி அறிமுகம் செய்து ஒருங்கிணைத்தார். வருமானவரி இணையதளத்தில் வருமான வரி பிடித்தங்களை சரிபார்ப்பது, படிவம் தாக்கல் செய்வது தொடர்பான நேரடியான செயல் விளக்கங்களை மாவட்ட கருவூல கண்காணிப்பாளர்கள் செய்து காட்டினர். அதிகமான அலுவலர்களை கொண்டுள்ள கல்வித்துறை அலுவலர்களுக்கு தனியாக பயிற்சி கூட்டம் நடத்துவது என்றும், வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர். பயிற்சி கூட்டதிற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here