திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மினி டேங்க்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் தொகுதி நிதியிலிருந்து தேரடிவீதி, தாழனூரான் சந்து, திருக்கோவிலூர் ரோடு, சின்னக்கடை தெரு, பாரதி தெரு பகுதிகளில் ரூபாய் 10-லட்சம் மதிப்பீட்டில் 5 ஆழ்துளை கிணறுடன் கூடிய மினி டேங்குகள் மற்றும் திருவிக தெரு, புனித அந்தோனியார் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் முடிவுற்ற பணிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, புவனேஸ்வரி, அன்சர்அலி, மணிப்பிள்ளை, டேவிட், சங்கர், வைத்தீஸ்வரி மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




















