கும்பகோணம், ஜூலை. 21 –

கும்பகோணத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அணைக்கரை மதகுச்சாலையில் மீன் பிடிக்கச் சென்ற நால்வரில் மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட கொஞ்சிநாதன் சிகிச்சை பெற்று வரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  நேரில் சென்று அவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கடந்த மீன் பிடிக்க நான்கு பேர் சென்றனர். அப் போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரை தீயணைப்பு மற்றும் கால்துறையினர் மீட்டனர். மற்ற மூவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் அவர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆகாஷ் என்பவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆகாஷ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மூன்று பேர் இல்லத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது உடன் அரசு தலைமைக்கொறடா கோவிசெழியன் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெரும்தலைவர் கோ.க அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளஞ்சிநாதனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்ப்பதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதன் அருகில் உள்ள ஐந்து அரசு மேனிலைப்பள்ளிகளும், 17 தனியார் பள்ளிகளும், 2 கல்லூரிகளும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது முதல்வர் உத்தரவிற்கு ஏற்ப மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு புதிதாக சான்றிதழ்கள் வழங்கிட ஏதுவாக இதற்காக தனி டிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக, தனிநபர் தூண்டுதலுக்கு ஆளாகி இளைஞர்கள் தங்களை வாழ்க்கையை பலிகடா ஆக்கி கொள்ள வேண்டாம் என்றும் பள்ளி குறித்த வழக்கில், நீதிபதி குறிப்பிட்டுள்ளபடி, வீடியோ ஆதாரங்களின் படி, இழப்பீடுகளுக்கான தொகையை கலவரத்தில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் வசூலிக்க வேண்டும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஒரு குழந்தை இழப்பிற்கு நீதி வேண்டி போராடியவர்கள் இன்று 3 ஆயிரம் குழந்தைகளை பாதிக்கும் படியான செயலை ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடியும், தீ வைத்து கொளுத்தியும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் சாதித்தது என்ன என்றும் கேள்வி எழுப்பிய அவர், வெள்ள காலங்களில் அரசு சார்பாக, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் எச்சரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு நடக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்க கூடாது என்றும், இதில் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரை கலந்து பேசவுள்ளேன் என்றும், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here