கும்மிடிப்பூண்டி, ஜூலை. 10 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைப்பெற்றது. இம் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்தவாறு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் திருமலை, மெய்யழகன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணி, ஊராட்சி செயலர் சோபன்பாபு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






















