திருவண்ணாமலை. ஜூலை. 09 –

திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை – வேலூர் சாலையில் பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் 8 அடி வெண்கல திருவுருவ சிலை ஆகியவற்றை முதல்வர் மு..க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தொடர்ந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து திமுக சார்பில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி சி.என்.அண்ணாதுரை எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஒ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றுகையில் திருவண்ணாமலைக்கு வருபவர்கள் கிரிவல பாதையை சுற்றி வருவார்கள் ஆனால் இன்று நான் திருவண்ணாமலை சுற்றிவரக்கூடிய சூழ்நிலையை நம்முடைய எ.வ.வேலு உருவாக்கியிருக்கிறார். திருவண்ணாலையின் உச்சியில்தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால் இன்றைய தினம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒளியமாக காட்சியளிக்கக்கூடிய வகையில் திமுக மாபெரும் கூட்டம் இங்கு எழுச்சியோடு மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எ.வ.வேலு என்று சொன்னால் எதிலும் வல்லவர் என்று சொல்வது அவரை புகழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்று சொல்வதற்காக இல்லை. அவருடைய இயல்பே அப்படிதான் அவரிடம் ஒரு செயலை கொடுத்தால் அதன்பிறகு அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். சொன்ன நாளைக்கு வந்தால் போதும் அந்த அளவுக்கு சுத்தமாக கனகச்சிதமாக அதை முடித்துக்காட்டக்கூடியவர்தான் வேலு. இந்த ஆற்றல் எல்லோருக்கும் வாய்க்காது ஆற்றல் வாய்ந்தவர்கள் கூட அது போல் வேலை பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது ஆற்றலும் ஆர்வமும் கொண்ட அவரின் முயற்சியால்தான் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பல்வேறு மாவட்ங்களில் நம்முடைய தலைவர் கலைஞர் சிலையை அமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக இந்த சிலைகள் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஊரெல்லாம் திறந்து வைத்து விட்டு இப்போது தன்னுடைய ஊரில் திருவண்ணாமலையில் கலைஞர் வெண்கல சிலையை திறந்துவைத்துள்ளார். அவருக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்வது போல ஆனால் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என்பதற்காக நன்றி சொல்கிறேன்.

அண்ணா பெயரில் நுழைவுவாயில் அமைந்திருக்கிறது. தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை தலை நிமிர வைத்த பெருந்தகை அறிஞர் அண்ணா, பூமி பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார் அண்ணா, அதன் நினைவாக இந்த அண்ணா நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழினத்தை தம் தொலை நோக்கு பார்வையால் உயர்தியவர் கலைஞர். அதனால்தான் அவரது சிலையில் வானத்தை நோக்கி கலைஞர் கை உயர்த்தி நிற்கிறார்.

 

தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும். முற்போக்கு சமுதாயமாக தமிழினம் வளர்ந்திட வேண்டும். திருவண்ணாமலையும் தீபத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அதுபோல் திருவண்ணாமலையும் திமுகவையும் பிரித்து பார்க்க முடியாது. கழகம் நடத்திய முதல் கூட்டத்தில் ரூ.1451 வசூல் ஆனது அதில் 100 ரூபாய் திருவண்ணாமலையை சேர்ந்த ப.உ.சண்முகம் வழங்கினார். முதல் முதலின் திமுக 1957ம் ஆண்டு போட்டியிட்டது. அதில் 15 எம்எல்ஏக்கள் வென்றனர். அதில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ப.உ.ச. பி.எல்.சந்தானம், கள்ளூர் அண்ணாமலை ஆகிய  3 பேரும் வென்றனர். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் 2 பேர் வென்றனர். அதில் திருவண்ணாமலையை சேர்நத  இரா.தருமலிங்கம் வென்றார். கழகத்துக்கு அமைப்பு ரீதியாக கால்கோள் நாட்ட அடித்தளம் மிட்டது.

 

கடந்த 1957ல் நடைபெற்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு திருவண்ணாமலையில் மாநாட்டை நடத்தினார் அண்ணாதுரை,  இந்தி எதிர்ப்பு மாநாடு முதல் நாளும் திமுக மாநாடு 2வது நாளும் நடைபெற்றது. தமிழ்மொழியை காக்கவும் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டிய திருவண்ணாமலையில் அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலை அமைத்திருப்பது பொருத்தமானது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 1963ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் எதிர் கட்சியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்டு ப.உ.சண்முகம் வெற்றிப் பெற்றார். அந்த வெற்றிக்கு தேர்தல் பொறுப்பாளராக கருணாநிதி தலைமையேற்றிருந்தார். திமுகவின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த திருவண்ணாமலை தேர்தல் வெற்றிதான் அடுத்த நடைபெற்ற பொதுத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது என கருணாநிதி சுட்டிக்காட்டினார்.

 

முதன் முதலாக திமுக ஆட்சியை கைப்பற்ற களம் அமைத்து வெற்றி சூத்திரததை கற்பித்தது திருவண்ணாமலை என பெருமிகழ்ச்சியுடன் கூறுகிறேன். தமிழக சட்டப்பேரவைக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் தொடங்கினேன். அதன்பிறகு தமிழகம் முழுவதும் தொகுதி தொகுதியாக சென்று மனுக்களை பெற்றேன். 100 நாளில் நிறைவேற்றுவேன் என்றேன். திமுக ஆட்சி அமையும் உங்கள் கவலைகள் யாவும் தீரும் என சொன்னேன். என்மீது நம்பிககை வைத்து லட்சக்கணக்கான மனுக்களை மக்கள் கொடுத்தனர். திமுக வெற்றிவாகை சூடுவதற்கு அடித்தளம் அமைத்தது. மக்களின் அரசாக மக்கள் நல அரசாக மக்கள் விரும்பும் அரசாக மக்களின் கவலையை போக்கும் அரசாக மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திராவிட மாடல் அரசாக நடத்தி வருகிறோம்.

 

தமிழை போற்றக்கூடிய அரசாக தமிழகத்தை காக்கும் அரசாக நடத்தி வருகிறேன். அண்ணாவின் ஆசைகள் கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றிவிட்டு திருவண்ணாமலைக்கு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக வந்துள்ளேன். எனது கடமைகளை சரியாக செய்து வருகிறேன் என சொல்வதற்காக வந்துள்ளேன். அண்ணா கருணாநிதியைப்போல் ஆற்றலை பெற்றாக வேண்டும். செயல்களை செய்தாக வேண்டும் உழைத்ததாக வேண்டும் ஆற்றலும் செயலும் உழைப்பும் திமுகவுக்கும் தமிழகத்துக்கும் பயன்பெற வேண்டும். கழகம் வளர காரணம் கலைஞரின் தொண்டுதான் அண்ணாவை போல கலைஞரை போல பேராசிரியரை போல உழைக்கும் ஆற்றலை பெற வேண்டும் கடந்த 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பினால் தான் தமிழ்நாடு வளர்ந்து இருக்கிறது. மேன்மை அடைந்திருக்கிறது.

 

தமிழகத்துக்கும் தமிழ்மொழிக்கும் காவலர் திமுகதான். திருவண்ணாமலையில் திறந்திருப்பது கருணாநிதியின் சிலை அல்ல. கொள்கை மலை மனசாட்சியும், நாட்டு மக்களையும் தாண்டி வேறு ஏதுமில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறோம். திமுக ஆட்சி உருவாக வேண்டும் என்று எந்த எண்ணத்துடன் ஆதரவு கொடுத்தீர்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்போம் என்றார்.

அதனைத் தொடர்ந்து திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கினார். கலைஞர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு தங்க சங்கிலி அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை செயற்குழு உறுபபினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here