கும்பகோணம், ஜூன். 22 –
வழக்கறிஞர்கள் தரப்பில், கும்பகோணம் கிழக்கு மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில், முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
மேலும், இன்றைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என டிஎஸ்பி உறுதியளித்ததன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இருப்பினும் வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்கிறது. இன்று கைது செய்யாவிட்டால், வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை நீதிமன்ற வளாகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில், கும்பகோணம் வழக்கறிஞர் சங்க உறுப்பினரான, வழக்கறிஞர் சுந்தரை வெட்ட முயன்ற நபர்கள் குறித்து சுவாமிமலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை இதனை கண்டித்தும், ஒரு மோசடி புகார் குறித்து வழக்கறிஞர்கள் சங்க விசாரணைக்கு ஆஜராக மறுத்ததுடன், வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி அவமதித்து, கொலை மிரட்டல் விடுத்த, வழக்கறிஞர்கள் தம்பதி பூம்பொழில், ராஜசேகர் ஆகியோர் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவே இதனை கண்டித்தும், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், சங்க தலைவர் ராஜசேகர் தலைமையில், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில், முன்பு முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இன்றைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என டிஎஸ்பி உறுதியளித்ததன் பேரில், போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது, இருப்பினும் வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்கிறது இன்று கைது செய்யாவிட்டால், வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை நீதிமன்ற வளாகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு விடுத்துள்ளனர்.