கும்பகோணம், ஜூன். 13 –
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். D1 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருலோகி (வழி) ஆடுதுறை, துகிலி காலை 6.45 மணிக்கு, மாலை 4.35 மணிக்கும் மற்றும் திருலோகியிலிருந்து கும்பகோணம் (வழி) துகிலி ஆடுதுறை காலை 7.55, மணிக்கு மாலை 5.35 மணிக்கும் இயங்கும் தொடர்ந்து கும்பகோணம் நகர்-2 கிளை தடம் எண். A15 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆடுதுறை (வழி) அம்மன்குடி வடகரை காலை 630, மணியளவில் 9.10, மதியம் 145, மாலை 4.20, மணிக்கும் மற்றும் ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் (வழி) வடகரை அம்மன்குடி காலை 7.55, மணிக்கு 10.20, மாலை 3.05, 5.35 மணிக்கும் இயங்கும் பேருந்தினை அம்மன்குடி பேருந்து நிலையத்திலிருந்து. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் கணேசன் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் கோ.க அண்ணாதுரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி கே எம் ராஜா திருவிடைமருதூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ் அம்மன்குடி ஊராட்சி மன்றத்தலைவர் பவுன்யம்மாள் கரும்பாயிரம் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















