திருவாரூர், மே. 31 –
செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன்
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்காக 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மே மாதம் தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று நாகை மாவட்டம் கல்லார் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை நெடுஞ்சாலைகள் கொத்தங்குடி பகுதியில் உள்ள கொத்தங்குடி வாய்க்கால் 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு உள்ளது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல பேரளம் அருகே வீரா நத்தம் வாய்க்கால் 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு உள்ளது இதனையும் தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் பொது மக்களை சந்தித்து மனுகளை பெற்று கொண்டார்,
பேட்டி : பாலமுருகன் விவசாய சங்க செயலாளர்




















