திருவாரூர், மே. 30 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீரமங்கலம் பகுதிகளில் சமீபகாலமாக காற்று பன்றிகள் இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருகிறது..
அப்பகுதி விவசாயிகள் சொல்லும் போது, எங்களால் காட்டு பன்றிகளை ஒழிக்க முடியவில்லை எனவும், விளை நிலங்களில் தெளித்த விதைகள் வீணாகிவிட்டது.. எங்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்கள்.
மேலும் அப்பகுதியினர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வலங்கைமான் வட்டாட்சியர், மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.