காஞ்சிபுரம், மே. 29 –

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் பீமன் – துரியோதனன்  படுகள உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 108க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் ஏந்தி கச்சபேஷ்வரர் திருக்கோவில் இருந்து துவங்கி குமரகோட்டம் முருகன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் வழியாக பஞ்சு பேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வந்தடைந்து பெண்கள் ஒருவர் ஒருவராக திரௌபதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்து  பிரசாதம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here