மீஞ்சூர், மே. 27 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள அரியன்வாயல் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

அரியன்வாயல் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாளாக இருந்த நடுநிலைப் பள்ளியினை  உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையும் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டியும் கோரிக்கை எழுந்தது.

அதனடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இந்தியன் பெட்ரோ புரோடக்ட் லிமிடெட் (ஐபிபிஎல்) நிறுவனத்தின் சார்பில் சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் பூமிபூஜையைத் துவக்கி வைத்தார். 2 வது வார்டு கவுன்சிலர் அபுபக்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழுப் பெருந்தலைவர் ஜி.ரவி, மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர்கள்  சுமதி தமிழ்உதயன், ரஜினி, நக்கீரன், தனலட்சுமி தன்ராஜ், மீஞ்சூர் வியாபாரிகள் சங்க தலைவர் ஷேக் அகமது, ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் மீஞ்சூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அன்பரசு,  குரு சாலமன், காமராஜ் ரியாஸ்அகமது. சாயின்ஷா. மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாலா ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here