திருவள்ளூர், மே. 23 –
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றயிம் கருணாகரச்சேரி ஊராட்சில் உள்ள அமுதூர் கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 7.5மீட்டர் அகலமும், 83 மீட்டர் நீளத்திலும் ரூ.5.71 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உயர் மட்ட பாலம் அமைக்கும் திட்டப்பணிக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அப்பணிக்கான அடிக்கல்லை நட்டு பணியினை துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருணாகரச்சேரி ஊராட்சியில் உள்ள அமுதூர் கிராம ம் முதல் ராமாபுரம் சாலை வரைவுள்ள கூவம் ஆற்றில் மழைக்காலத்தில் மழை வெள்ளம் வரும்போது 6 கி.மீ தூரம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றி வரவுள்ள வேண்டிய இடர்பாடான சூழல் உள்ளது.
இப்புகார் தொடர்பாக கருணாகரச்சேரி ஊராட்சியில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட கிராம சபைக்கூட்டத்தில் இது தொடர்பாக கோரிக்கையை அக்கிராமத்தினர் வைத்தனர்.
அக்கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்டவர்கள் நிறைவேற்றித்தருகிறோம் என்றளித்த வாக்குறுதியை நிறேவேற்றும் வகையில் குறுகிய காலத்தில் அதற்கான திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு அதனை நிறைவேற்றும் வண்ணம் நேற்று அமுதூர் கிராம ம் முதல் ராமாபுரம் சாலை வரை உற்ற கூவம் ஆற்றின் குறுக்கே 7.5 மீட்டர் இகலமும், 83 மீட்டர் நீளமும் கொண்ட ரூ.5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டப்பணிக்கான அடிக்கல் நடும் விழா நடைப்பெற்று அதற்கான அடிக்கல்லை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நட்டு பணியினை துவக்கி வைத்தார்.
இப்பாலம் அமைப்பதின் மூலம் மழைக்காலங்களில் உபரி நீர் கால்வாயில் அதிகளவு நீர் வரத்தின் காரணமாக சித்துக்காடு, கருணாகரச்சேரி, இராஜங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3000 பேர் அன்றாட தேவைகளுக்காக பூவிருந்தவல்லி மற்றும் திருவள்ளூர் செல்வதற்கு சுமார் 6 சுற்றிக்கொண்டு செல்லும் பிரச்சினைக்கு இன்னும் சில மாதங்களில் தீர்வு காணப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இத்துவக்க விழா நிகழ்வில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஊரகவளர்ச்சி (ம) ஊராட்சிகத்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) (பொ) சுதா, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.