சென்னை, மே. 15 –

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு சார்பில் சைக்கிள்தான் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள்தான் போட்டியில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 200 வீரர்கள் கலந்துகொண்ட போட்டியை 195-வது திமுக மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

துரைப்பாக்கத்தில் துவங்கிய சைக்கிள்தான் போட்டி ஓஎம்ஆர் சாலை மார்கமாக படூர் ரவுண்டானா வரை சென்று நாவலூரில் உள்ள விவரா மாலில் முடிவடைந்தது.

20 கிலோ மீட்டர் தூரத்தை விரைவில் கடந்து முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஆழ்கடல் தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.  உடன் சென்னை தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் மாரத்தான் வீரர் எஸ்.ஏ.ஹரிகிருஷ்ணன், அனைத்து இந்திய வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சிலம்ப ஆசான் கோபிநாத் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சைக்கிள்த்தான் வீரர்களுக்கு உடற்பயிற்சி குறித்து உடல் ஆரோக்கியம் குறித்தும் அறிவுரை வழங்கினர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here