திருவள்ளூர், மே. 10 –
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவதாகவும், அதற்கான தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்திவுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுயவுதவிக்குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் பயன் பெறலாம். பொது பிரிவினர் நகர் புறத்தில் தொழில் துவங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் துவங்கும் தொழிலாளகளுக்கு 15 சதவீதம் மானியமும், ஊரகப்பகுதியில் தொழில் துவங்கும் பட்சத்தில் 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியிலின மற்றும் பழங்குடியினர் நகர்புறத்தில் தொழில் துவங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்டமதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமும், ஊரகப்பகுதியில் தொழில் துவங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்திற்கு 285 நபர்களுக்கு மானிய தொகையாக ரூ.825 இலட்சங்கள் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 95 பயனாளிகளுக்கு ரூ.275 இலட்சங்கள் மானியமாக இலக்கு நிர்ணியிக்கப்பட்டு 137 பயனாளிகளுக்கு ரூ.303.75 இலட்சங்கள் மானியமாக வழங்கப்பட்டது. இது கடந்த நிதி ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கீட்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் அதிகமான பயனாளிகளுக்கு கடன் உதவியும், மானியமும் இம்மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது என அவ்வறிவிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்புவோர் இணையதள முகவரி www.kviconline.gov.in/pmegpeportal இல் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுர், தபால்நிலையம் அருகில், திருவள்ளூர் – 602003 என்ற முகவரியில் அணுகலாம்.





















