திருவாருர், ஏப். 29 –
குடவாசல் அருகேவுள்ள பழமையான கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில்ல் கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் 1000க்கும் மேற்பட்டப் பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மஞ்சக்குடி கிராமத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக பாடல்களைப் பாடி அருளிய சமயகுரவர்கள் தோன்றி அவர்களால் பாடல் பெற்ற தெய்வத் தன்மையாய் விளங்கும் சிறப்புமிக்க கோகநதநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
அதற்கான திருக்கோயில் திருப்பணிகள் பெரிய அளவில் பணச்செலவில் சீரமைப்பு மற்றும் வண்ணம்தீட்டல் பணி முடிவுப்பெற்று, நான்கு கால யாக பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதி அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.. மேலும் மேளதாளங்கள் மற்றும் கைலாச வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து, ராஜகோபுரம், விமான கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் சென்றடைந்தது.. தொடர்ந்து அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..
தொடர்ந்து, கருவறையில் உள்ள கைலாசநாதர் மற்றும் கோகநத நாயகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.




















