பூவிருந்தவல்லி, ஏப். 27 –
பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு காங்கிரஸார் சிறப்பான வரவேற்பளித்தனர்.
சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அருள் அன்பரசு நிகழ்ச்சி ஏற்பாட்டில் கடந்த 17ஆம் தேதி மகாத்மா சீனிவசான் தலைமையிலான ஜி.எஸ்.டி பாத யத்திரை குழுவினரை கோவை மாநகரில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி துவக்கி வைத்தார்.
இந்த நடைபயணக்குழுவினர் காங்கிரஸ் கட்சியின் மகாத்மா சீனிவாசன் தலைமையில் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் திருவண்ணாமலை விழுப்புரம் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வழியாக இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்தனர். இவர்களுக்கு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து தனியார் திருமண மண்டபத்தில் மரியாதை செலுத்தி உபசரிப்பு செய்தார். கடந்த 17 நாட்களாக நடைபயணமாக வந்த 57 காங்கிரஸ் நபர்களும் நாளை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில்
ஜிஎஸ்டி பாத யாத்திரை கோவை முதல் சென்னை வரை 550 கிலோ மீட்டர் ஐம்பத்தி ஏழு நபர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரவும்,கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், இந்த பாதயாத்திரை தொடங்கியதாகவும், மேலும் பிரதமர் கூறுவது என்ன வென்றால் ஒரு நாடு ஒரு மொழி ஒரு வரி என்று ஜிஎஸ்டி க்குள் கொண்டு வந்தார். ஜிஎஸ்டி க்குள் எல்லா பொருட்களும் விற்பனை செய்யும் பொழுது பெட்ரோல் டீசல் விற்பனை ஏன் மத்திய அரசு ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரவில்லை என்றும் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி கொண்டு வந்தால், பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்றும் 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை 108 ரூபாயில் இருக்கும்பொழுது பெட்ரோல் விலை 71 ரூபாய்க்கும் டீசல் விலை 52 ரூபாய்க்கும் கேஸ் விலை 410 ரூபாய்க்கும் கொடுக்க முடிந்ததும் என்று தெரிவித்தார். பின்னர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது என்னவென்றால் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி கீழ் கொண்டுவர நாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால் மாநில அரசு தான் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கிறார் என்றும் கடந்த 46 மசோதாக்களில் ஜிஎஸ்டி க்குள் பெட்ரோல் டீசல் விலை ஒரு மசோதாவில் கூட, போடவில்லை என்றும் பின்னர் இவர்கள் கேட்பது என்னவென்றால் பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி மசோதாவில் தீர்மானம் போட வேண்டுமென்றும் மாநில அரசு ஆதரிக்கிறதா அல்லது எதிர்ப்பதா என்பதை பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நடைபயணம் நிகழ்ச்சியில், பூவை ராஜா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநிலத் துணைச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை துணைத் தலைவர் அட்வகேட் M. அன்பு. மாநில துணைச்செயலாளர்கள் விஜயலட்சுமி. பூவை ராஜா மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் ஷாஜகான் எஸ் எம் சரவணன் மாவட்ட தலைவர்கள் பிரகாஷ் குமார், ராஜகுமாரன், தென்பிலாக் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.