திருவள்ளூர், ஏப். 26 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் கொண்டாடும் விதத்தில், வேடங்கிநல்லூரில் உள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்து விளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது துணை பதிவுத்துறை தலைவர் என். சேகர், மாவட்ட பதிவாளர் பா. கல்பனா, தணிக்கை மாவட்ட பதிவாளர் ராமச்சந்திரன், சார் பதிவாளர்கள், பதிவுத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.





















