திருவாரூர், ஏப். 25 –
திருவாரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச் செயலாளர் மருதுராஜ் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி இத்தேர்தலை தொடங்கி வைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ,மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 11 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், நகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஒருமனதாக தற்போதைய மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் பெயரில் விருப்ப மனுவை செலுத்தினர்.
இத்தேர்தலில் அதிமுக அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்