பூவிருந்தவல்லி, ஏப். 22 –

பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் பயணிகளை பின்தொடர்ந்து  பஸ்ஸில் அவசரமாக ஏறுவதை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து செல்போன்களை லாவகமாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருடுவது அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது.

அதில் அவர்கள் அந்த பேருந்து நிறுத்தத்தில் தொடர்ந்து பேருந்து பயணிகளிடம் செல்போன்களை திருடியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் அவர்கள் அங்கு தங்கள் கைவரிசையை காட்ட முற்பட்டபோது அவர்களை அப்பகுதி மக்கள் வளைத்துப்பிடித்துள்ளனர். அதில் சிலர் அவர்களை அடித்துக் கைகளை கட்டியும் பூவிருந்தவல்லி காவலர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலத்தைச்சேர்ந்த ஏசு வயது 26 என்பதும் அவருடைய கூட்டாளி 18 வயதுடைய சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் இத்திருட்டினை செய்யும் போது கையில் பேப்பரை வைத்துக்கொண்டு பயணிகளின்  சட்டை மேல் பாக்கெட்டை மறைத்தது போல் பாக்கெட்டில் இருக்கும் செல்போனை திருடிச்செல்லும் உத்தியைப் பயன் படுத்தி வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

உடன் அவர்கள் இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து சென்று அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுப்போன்ற தொடர் செல்போன் திருட்டு நடைப்பெற்று வருவதாகவும், அதுக்குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாகி ஏற்படுத்தி வருகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here