மதுரவாயல், ஏப். 21 –

இன்று வானகரத்தில் 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக அரசு சார்பில் சற்றுச்சூழல் பாதுகாப்புக்கருதி, 500 பேருந்துகள் இயக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அண்மை காலமாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் சூழலில் மக்கள் இதற்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி வருவது  கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டாடா நிறுவனத்தின் சார்பில் மின்சார கார்கள் முதற்கட்டமாக 101 வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வானகரம் அருகே  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மதுரவாயல் எம்எல்ஏ கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்களை வழங்கினார்கள். மேலும்  போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்சார காரை சிறிது தூரம் சோதனை ஓட்டம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக மின்சார வாகனத்தை இயக்க வேண்டிய அவசியமான சூழல் நிலவி வருவதாகவும், தமிழக முதல்வர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சுற்றுச்சூழல் அமைச்சகம் என்பதை மாற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் என்று மாற்றி அதற்கான கொள்கைகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும், தமிழகத்தில் மின் வாகனங்கள் இயக்க வேண்டிய சூழல் தற்போது எழுந்துள்ளது. அதனால் தமிழக அரசு சார்பில் சென்னையில் 500 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மின்சார பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் டீசல், பெட்ரோல் இல்லாமல் மாற்று சக்திகளை கொண்டு இயங்கக் கூடிய பஸ்கள் இயக்கப்படும் எனவும், மேலும் மத்திய அரசு அனுமதித்த வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசும் அதன் அடிப்படையில் பணி செய்யும் என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here