மதுரவாயல், ஏப். 21 –

மதுரவாயலில் இன்று அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைப்பெற்றது. அதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயலில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான பா.பெஞ்சமின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பச்சையம்மாள், மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஆகியோரிடம் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினார்.

இத்தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் பென்ஜமினுக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, சால்வை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் தேவதாஸ், இம்மானுவேல், ஒன்றிய கழகச் செயலாளர் கௌதமன், உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here