குன்றத்தூர், ஏப். 19 –
மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மதனந்தபுரம் கே. பழனி நேற்று அவர் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் மீண்டும் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவின் செயலாளராக நான் தலைமைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனவும் மேலும் தமக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களுக்கும், மேலும் மாவட்ட செயலாளர் அண்ணன் வி.சோமசுந்தரம் பி.எஸ்.சி., பிஎட்., அவர்களுக்கும் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் தமது நன்றியினை தெரிவித்துள்ளார.