கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணத்தில் இந்திய குழந்தைகள் நல சங்கம் சார்பில் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்ட கிளையின் சிஎம்இ திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் டி டி கே பி என் தலைவர் வெற்றிவேலன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவப் பணிகள் இயக்குனர் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் மருத்துவர்கள் பழனிவேல், விருதகிரி, மகாலிங்கம், லட்சுமி நாராயணன், பரத் குமார் ,வெங்கடேஸ்வரன், பாலசங்கர், நந்தினி, உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் புதிய வகை தடுப்பூசிகள் அதன் நன்மைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் திருச்சியில் இருந்து வருகை தந்த மருத்துவர் சர்மிளா செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பெண்களுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வைறு கருத்துக்களை எடுத்துரைத்தார். குறிப்பாக 18 வயது முடிந்த உடன் திருமணம் செய்ய கூடாது. என்றும் மேலும் பெண்கள் 21 வயது முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டு முதல் குழந்தை பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து சிறு வயதில் பெண் குழந்தைகள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க கூடாது எனவும், பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் சிறு வயதில் பெண்கள் அதிக எடை இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உணவுகளை சாப்பிடக் கூடாது ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் இதை அனைத்தும் பின்பற்றினால் மட்டுமே பெண்கள் கருத்தரிப்பது சுலபமாகும். மேலும் அனைவரும் கர்ப்பமடைந்து குழந்தை பெறுவதற்கு தகுதி அடைவார்கள் இதனால் செயற்கை கருத்தரிப்பு குறைவாகும் என்று தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஐந்து மாவட்டத்திலிருந்து மற்றும் காரைக்கால் மாநிலத்திலிருந்தும் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.





















