கும்பகோணம், ஏப். 12 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இன்று காலை அந்தப் பகுதிக்கு செல்வோர் குட்டை நீரில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை அழுகிய நிலையில் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்.
தொடர்ந்து தஞ்சையிலிருந்து உடற்கூறு ஆய்வுக்காக குழந்தையை பரிசோதிக்க மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு உடற்கூறு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையை யாராவது வீசி சென்றார்களா அல்லது கொன்று வீசி சென்றார்களா என்றவாறு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிவுள்ளனர்.