கும்பகோணம், ஏப். 10 –
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனம் திருவிழாவினை முன்னிட்டு இன்று 1008 பேர் பால்குடம் எடுத்து வந்தனர்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது, இத்தலத்தின் 93வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது,
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காளியம்மன் திருநடனம் கடந்த 29ம் தேதி செவ்வாய்கிழமை முதல் ஏப்ரல் 02ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஏப்ரல் 08ம் தேதி வெள்ளிக்கிழமை அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும், நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான இன்று ஞாயிற்றுக்கிழமை வீரசோழ ஆற்றங்கரையில் பத்துக்கு மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் மேளதாளம் முழங்க 1008 பால்குட ஊர்வலம், அலகு காவடிகளுடன் முக்கிய வீதி வழியாக கோவில் வந்து அடைந்தனர்,
மேலும், மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்ற பிறகு தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாட்டாமைகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




















