திருமுல்லைவாயல், ஏப். 07 –

தருமில்லைவாயில் காவல்நிலைய ஆய்வாளருக்கு இன்று மதியம் 12.00 மணியளவில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் விஜயராகவன்  தலைமையிலான காவல்துறையினர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

பதுக்கலில் ஈடுப்பட்ட திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகர் 4 வது தெருவில் வசிக்கும் நடராஜன் (53) என்பவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடராஜனை அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here