கும்பகோணம், ஏப். 06 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் உள்ள அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், வேப்பத்தூர் முன்னொரு காலத்தில், வேதபண்டிதர்கள் நிறைந்த கடிகாஸ்தலமாக (பல்கலைக்கழகமாக) இருந்ததாக ஸ்ரீ மகா பெரியவா கூறிய பெருமை கொண்ட வேப்பத்தூரில் அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் காவிரி நதியின் வடபுறம் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும் இத்தலத்தை இராமபிரான், அகஸ்திய மாமுனியர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாக புராணம் கூறுகிறது,  இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் நிலையில் அர்ச்சுணனுடன் காட்சியளிக்கிறார்

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்திற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 03ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று 6ம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூர்ணாஹ_தியும், மகா தீபாராதனையும் நடைபெற்று, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து ரோகிணி நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, பிறகு, மூலவர் மகா அபிஷேகமும், நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here