கும்பகோணம், ஏப். 03 –
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அமுதா வயது 57 இவர் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் தாராசுரத்தைச் சேர்ந்த வனிதா என்பவரிடம் இட்லிக்கடை வைப்பதற்காக ரூ. 20 ஆயிரம் மகளிர் சுயவுதவிக்குழு மூலம் அவரிடம் கடனாகப் பெற்றுவுள்ளார்.
மேலும், அந்தக் கடனுக்கான வட்டியாக சிறுக சிறுக இதுவரை ரூ.50 ஆயிரத்திற்கும் மேலாக திருப்பிச் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். இந்நிலையில் அமுதாவிடம் வனிதா நீ வாங்கிய கடனில் இன்னும் வட்டியுடன் ரூ. 60 ஆயிரம் நிலுவையில் உள்ளதாகவும், அதனை உடனே திரும்ப செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாக அமுதா தெரிவிக்கிறார்.
மேலும், தற்போது வருமானம் இல்லாத சூழல் உள்ளதாகவும், ஏற்கனவே நான் வாங்கிய கடன் தொகை ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் செலுத்திய பின்பும் திரும்ப திரும்ப பணம் கேட்பது நியாயமா என அமுதா வனிதாவிடம் கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமுதாவை, அடியாட்களுடன் சேர்ந்து வனிதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமுதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அமுதா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை தொடர்ந்து காவல்துறையினர் இப்பிரச்சினைக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேட்டி.
அமுதா .
வட்டிக்கு கடன் பெற்றவர்.
கும்பகோணம்