பொன்னேரி, ஏப். 03 –
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமை வகித்தார். அமமுகவின் துணை பொதுச்செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் ஜி .செந்தமிழன், முன்னிலை வகித்தார். பொன்னேரி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ரகுபதி, கும்மிடிப்பூண்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கோபி, உள்ளிட்டோர் வரவேற்புரை நல்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அமமுக வின் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, கழக துணைநிலை செயலாளர் உமாதேவன். அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா, அமைப்புச் செயலாளர் ஆரூர் முருகன் உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர்கள் பேசுகையில் இப்பகுதிகளில் இன்னும் அதிகப்படியான வாக்காளர்களை நீங்கள் பெற வேண்டும் ,அதற்கு பொறுப்பாளர்கள் சரியான முறையில் செயலாற்றி வெற்றி காண வேண்டும் என்று பேசினார்கள். எல்லா அமைப்புகளிலும் சரியான பொறுப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உண்டான பயிற்சிகளை அளித்து கட்சியை வளர்க்க வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்கள்.
இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் டாக்டர்.பி.ராம்குமார்.சதீஷ் ,தன்ராஜ், சூர்யா ,விக்னேஷ், பானுமதி, மாலதி, வச்சலா , உள்ளிட்ட அமமுக ஊராட்சி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் பிற அணி செயலாளர்கள் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர், இறுதியில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அமமுக செயலாளர் சுரேஷ் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.