மாங்காடு, ஏப். 03 –
கோடை காலத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக மாங்காடு நகரச்செயலாளர் பிரேம்சேகர் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கான திறப்பு விழா இன்று மாங்காட்டில் நடைப்பெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் வளர்மதி, .மாவட்ட கழக. செயலாளர் கந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோடைக்கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து இளநீர் வெள்ளரிக்காய் தர்ப்பூசணி ஜூஸ் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கி தாகம் தீர்த்தார்கள். இவ்விழாவில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள். மேலும் இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய செயலாளருமான பழனி. வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.





















