பொன்னேரி, ஏப். 02 –

பொன்னேரி அடுத்த  பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள்  வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடிவந்த புள்ளிமான் பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் வயல் பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது. அப்போது, நாய்கள் மான்களை கடித்து துரத்தியதில் கம்பி முள் வேலியில் சிக்கி இறந்துள்ளது. பொதுமக்கள்  பொன்னேரி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில் மாதர்பாக்கம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here