பொன்னேரி , மார்ச். 29 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2, ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர் ஜெயபால் தலைமையேற்று நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தாமோதரன் அருண் விஜயன் திருநாவுக்கரசு பாலன் விக்டர் ஜெபஸ்டின் நடராஜ் ஜீவா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய பொறுப்பாளர்கள் மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தைத் திருத்தியதை திரும்ப பெற வேண்டும், பிபிசிஎல் மற்றும் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும் பெட்ரோல். டீசல். சமையல் எரிவாயு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.