கும்பகோணம், மார்ச். 27 –

கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமம் வடகுடி பகுதியில் அமைந்துள்ள அழகிய நாயகி உடனாகிய பூவண நாதர் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி  சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே  ஏனநல்லூர் கிராமத்தில் வடகுடி பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான ஆலயமான அழகிய நாயகி உடனுறை பூவண நாதர் சுவாமி திருக்கோவில் முற்றிலும் சிதிலமாகி இருந்த நிலையில், சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆலயத்தின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த வியாழக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி சனிக்கிழமை மாலை முதல் கால வேள்விகள் நடைபெற்றது.

இன்று காலை இரண்டாம் கால வேள்விகள் 12திருமுறைகள் பாடி தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அவனது பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இப் பெரு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here