இராசிபுரம், மார்ச். 26 –

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் பயனாளிகளிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு உரிய பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என். இராஜேஸ்குமார் கலந்துக்கொண்டு ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், நகரமன்றத் தலைவர் கவிதா சங்கர், திமுக நகர செயலாளர் என்.ஆர் சங்கர் ராசிபுரம் ஒன்றிய தலைவர் கே.பி.ஜெகநாதன் உட்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here