எளாவூர், மார்ச். 18 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். அப்போது முகாமில் பங்கேற்ற மதபோதகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சிறப்பு மருத்துவர் ஏ.எம் அனுஷிகா எம்பிபிஎஸ் (எம்டி) (ஐரோப்பா) ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, ஈசிஜி போன்ற பொதுவான மருத்துவ பரிசோதனையும், பெண்களுக்கான பொது சிகிச்சை மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தார். மேலும் இம்முகாமில் பங்கேற்ற மருத்துவ பயனாளிகள் அனைவருக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டது.