திருவண்ணாமலை மார்ச்.14-
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்பட 5875 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் வங்கிகளில் நிலுவையில் உள்ள 283 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2கோடியே 1லட்சத்து 86ஆயிரத்து 550 வசூலிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 2178 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு நஷ்டஈடாக ரூ.9கோடியே 6லட்சத்து 52ஆயிரத்து 439 வழங்கப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.86லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 2461 வழக்குகளுக்க தீர்வு காணப்பட்டது.