கும்பகோணம், மார்ச். 11 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 ஊராட்சிகளில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் படி 219 வீடு கட்ட அரசாணையை பயனாளிகளுக்கு அரசு தலைமை கொறடா வழங்கினார்
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் படி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கீற்று வீடுகள், குடிசை வீடுகள் மாற்றி கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கும் திட்டத்தினை மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள்தான் இந்தியாவிலேயே முதல் முதலில் தொடங்கினார். என்றும் தற்போதும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதனை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர் வீடு கட்டும் பயனாளிகள் நல்ல முறையில், கட்டிய வீடுகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 35 ஊராட்சிகளை சேர்ந்த 219 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சரவணன், ராஜா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், முருகன் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.