கும்பகோணம், மார்ச். 08 –

இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார்

கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட  கருவளர்ச்சேரி கிராமத்தில் தமிழக அரசின், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது, இம்முகாமினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு நோய் குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய மருந்துகளும் வழங்கப்பட்டது மேலும் பல மாடுகளுக்கு சினை ஊசிகளும் கோமாரி தடுப்பூசியும் போடப்பட்டது, இதனை ஆய்வு செய்த பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர்,

தஞ்சை மாவட்டத்தில் 279வது கால்நடை மருத்துவ முகாமாக இது நடைபெறுகிறது, சிறப்பு முகாம்கள் நடத்த இந்த முகாம்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பசு மாடுகளும் சுமார் 58 ஆயிரம்  கோழி இனங்கள் இருப்பதாக இதன் மூலம் 14 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாகவும் இந்தியாவிலேயே தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தான் கால்நடை வளர்ப்பின் மூலம் 40 சதவீத வருவாய் ஈட்டி வருவதாகவும், அதனை மேலும் அதிகரிக்க, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

பேட்டி : தென்காசி ஜவஹர், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்,    கால்நடை பராமரிப்புத்துறை, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here