கும்பகோணம், மார்ச். 08 –
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை மதித்து கொண்டாடுவோம்.
நம் நாட்டில் ஆன்மிகம், அறிவுசார் சமூக மற்றும் அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது. நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும். உலக மகளிர் தினத்தையொட்டி கிழக்கு காவல் நிலைத்தில் கும்பகோணம் உட்கோட்டம் பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் பங்கேற்ற கோலப்போட்டி நடைபெற்றது.
இக்கோலப் போட்டியில் மங்கை ஒரு மாண்புமிகு படைப்பு சொல்ல முடியா வலியையும் தன் செல்லக் குழந்தையாக பொறுத்து கண்ணில் கரு விழியாக ஊர் வியக்க பிள்ளைகளை வளர்க்கும் அன்னை ஒரு மங்கைதான் பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும், உருவாக்கவும் தெரியும் என்று பல வண்ணங்களில் பெண் காவலர்கள் தங்களது திறமைகளை மகளிர் தினத்தில் காட்டினார்கள்.
சிறந்த கோலப்போட்டிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன தொடர்ந்து கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.



















