திருவண்ணாமலை மார்.6-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டார்.

தமிழர்கள் முந்தைய காலங்களில் எவ்வித கலப்படம் இல்லாத  பாரம்பரிய உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தனர். அத்தகைய பாரம்பரிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உண்ணுவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள். கர்ப்பணிப்பெண்கள், வளரினம் பருவத்தினர் பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் மற்றும் வட்டார அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.

அப்போட்டிகளில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட 42 சுயஉதவிக்குழுக்கள் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டியில் பங்கேற்றனர்.  இப்போட்டியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை சிறப்பாக தயாரித்து முதலிடம் பிடித்த மகளிர் சுயஉதவிக்குழு மாநில அளவில் நடைபெறும் ஊட்டச்சத்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழிப்புணர்வு போட்டியில் மகளிர் சுயயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட கம்பு,கேழ்வரகு,சாமை,திணை,குதிரைவாலி உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சரண்யா, உதவி திட்ட அலுவலர்கள் வில்லியம்ஸ், வெங்கடேசன், சுதாகர் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here