கும்பகோணம், பிப். 28 –

கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்கள் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் கொடுப்பதில்லை ஆரம்பத்தில் 15 ஆயிரம் ஊதியம் என்று பணியில் சேர்த்தார்கள். ஆனால் தற்போது கொடுக்கும் ஊதியமோ 10 ஆயிரம். மேலும், பெட்ரோல் அலவன்ஸ் தரப்படுவதில்லை,

மாத வருமானத்தில் 5 ஆயிரம் விழுக்காடு ஏற்படுவதால் பெரும் சிரமத்தில் குடும்பத்தை நிர்வாகிக்க வேண்டிய சூழல் தங்கள் வாழ்க்கையில் நிலவி வருகிறது. மேலும் இந்த ஊதியத்திலும் கை வைக்கும் வண்ணம் புதிய உத்தியை பயன்படுத்தி புதியதாக ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் சுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. என ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக இம்மாநகரத்தில் பணிப்புரிய 40 ஊழியர்கள் இருந்தாலே போதுமானது. ஏனெனில் அதற்கான ஆர்டர்களை கிடைக்கிறது. இதில் மேற்கொண்டும் ஆட்களை சேர்ப்பதால் மேலும் தற்போது தரும் ஊதியத் தொகை குறைவதற்கான சூழலை உள்ளது. இதனால் இப்பணியை நம்பி வெகு ஆண்டுகளாக வாழ்க்கையை மேற்கொண்ட தங்கள் வாழ்க்கை வாழ்வாதாரத்தை இழந்து கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம் எங்களிடம் எழுகிறது. என தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதிய ஆட்கள் சேர்ப்பு என்பதே பழைய ஊழியர்களை கழட்டிவிடும் உத்தியை நிறுவனம் கையாளுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது போன்ற பல்வேறு கேள்விகளோடு ஆர்பாட்டக்கலத்தில் அவ்வழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

ஆரம்பத்தில் 40 பேர் பணியில் இருந்தவர்கள் தற்போது தொடர்ந்து தினசரி பத்து ஆட்களாக சேர்த்து தற்போது 80 பேர் வரை பணியில் சேர்த்துள்ளனர். மேலும் ஆட்களை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். புதியவர்கள் வருவதை வரவேற்கிறோம் அதே சமயத்தில் அதற்கான தேவைகள் இங்குயிருப்பதாக தெரியவில்லை, இருப்பினும் ஏனிந்த புதிய ஊழியர்கள் சேர்ப்பு என்பது புரியாத புதிராக இருப்பதாகவும், மேலும் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும் உத்தியை மேற்கொண்டு இதனால் ஊழியர்களின் உழைப்பை சுரண்டும்  நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபடுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. தற்போது உள்ள ஆட்களுக்கே பணிகள் குறைவாகத்தான் உள்ளது தொடர்ந்து வேலை செய்யும் பணியாட்களுக்கு சரியான ஊதியமும் பெட்ரோல் அலவுன்ஸ் கொடுக்க வேண்டும். மேலும் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாஸ்திரா பல்கலைக்கழகம் அருகில் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here