கும்பகோணம், பிப். 27 –
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை ரமேஷ்குமார் கணேஷ்குமார் தினேஷ்குமார் மற்றும் லயன்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமையில் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் மதுசூதனன் நிர்வாக அலுவலர் ராமதுரை மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 350 மேற்பட்டருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.




















