கும்பகோணம், பிப். 15 –

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை  கீழஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஆடுதுறை கடைவீதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவர்  கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை  எடுத்து தனது ஸ்கூட்டி சீட்டின் கீழ் பகுதியில் வைத்து எடுத்து வந்துள்ளார். கடைவீதியில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பிய போது பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் காவல்துறையினர் கவியரசன், ரமணி, விக்னேஷ், தினேஷ் உள்ளிட்ட கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அதனைத்த தொடர்ந்து தனிப்படையினர் ஆடுதுரை கடைவீதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவை கொண்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட நபர் பணத்தை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.

மேலும் கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதில் திருவெறும்பூர் வரை சென்று இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து திருவெறும்பூரில் காந்திநகர் மாரிமுத்து மகன் கண்ணன்( 38) என்பவரை காவல்துறையினர் மடக்கி விசாரித்ததில் தான் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 1.5 லட்சத்திற்கான 2 ஆயிரம் நோட்டுக்களாக பணத்தை மீட்டனர். கண்ணன் ஏற்கனவே 24 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதும், அவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. விரைந்து பணத்தை மீட்ட தனிப்படை  காவல்துறையினர் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பாராட்டினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here