கும்பகோணம், பிப். 11 –
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது மாநகராட்சி நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதிகார பலம் பண பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்குகிறது. மக்கள் கேப்டன் அவர்களுக்கும் தேமுதிக வேட்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
ஆளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் திமுக தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் மிகப் பெரிய மனக்குறை உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் கொடுக்கப்பட்ட ஒட்டு மொத்த பொருட்கள் தரமில்லாத பொருட்களாக இருந்ததாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநில அரசு உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று காலம் காலமாகச் சொல்லப்படும் குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் மழை வெள்ள காலங்களில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பொறுப்பேற்று இரண்டு மாதம் மூன்று மாதம் என்றால் நாம் குறை சொல்லப் போவதில்லை கடந்த 9 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள் ஆனால் இப்பொழுது வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை எந்த முயற்சியும் எடுக்கவில்லை நீட் தேர்வை வைத்து அரசியல் தான் செய்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை நிச்சயமாக கும்பகோணம் ஆன்மீகத்தில் மிகப்பெரிய ஒரு நகரமாக விளங்குகிறது. இதை தனி மாவட்டமாக அறிவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. இந்த திருமண விழாவில் மாவட்ட செயலாளர் சங்கர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு சுகுமார் நகரச் செயலாளர் நந்தகுமார் ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.



















