கும்பகோணம், பிப். 5-

கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.. இந்நிலையில் இன்று கும்பகோணத்தில் 48 வார்டுகளில் வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது இதில் 13 வது வார்டில் போட்டியிட விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவரின் வயதின் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here