கும்பகோணம், ஜன. 14 –
108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாகமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும் சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், அரசு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேரோட்டத்திற்கு பதிலாக உற்சவர் சாரங்கபாணி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயாருடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருள, பிரகார உலா மட்டும் நடைபெற்றது.
இன்று முதல் 18ம் தேதி செவ்வாய் கிழமை வரை பொது மக்கள் தரிசனத்திற்கு தடை உள்ளதால், இந்நிகழ்வில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது . சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம் (எ) தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா கடந்த 06ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் 9ம் நாளான இன்று தைப்பொங்கலை முன்னிட்டு வழக்கமான தேரோட்டத்திற்கு பதிலாக, அரசின் கொரோனா கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் காரணமாக, உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேதராய் வெள்ளி ரதத்தில் எழுந்தருள, சிதறு தேங்காய் உடைத்து பிரகார உலா மட்டும் நடைபெற்றது, மேலும் இன்று முதல் வரும் 18ம் தேதி செவ்வாய்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு பொது மக்கள் தரிசனத்திற்கு அரசு தடைவிதித்துள்ளதால், இந்நிகழ்வில், திருக்கோயில் பட்டாட்சாரியார்கள், திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது























